+நானும் செஞ்ச தப்புமென்ன நல்லவரே சொல்லிவிடு+
ஏறெடுத்து பார்த்தாலென்ன
பேருகெட்டா போயிவிடும்
நானும்செஞ்ச தப்புமென்ன
நல்லவரே சொல்லிவிடு
நாள்முழுதா பார்க்கச்சொன்னேன்
கைச்செலவா செய்யச்சொன்னேன்
ஒரேமுறை பார்த்தாலென்ன
உன்கண்ணு கெட்டாபோயிவிடும்
அத்தமகன் மாமன்மகன்
கேலிபேச எனக்கில்லை
கருப்பாதான் பொறந்ததாலே
ஒருநண்பன்கூட கெடைக்கலே
வெள்ளையான பொண்ணச்சுத்தி
தேனீபோல மொய்க்கிறீங்க
என்மனசின் ஆதங்கத்தை
போக்கிட்டுத்தான் போனாலென்ன
கருப்பாக பிறந்ததென்ன
நானும்செஞ்ச தப்பாதப்பா
வெறுத்தென்னை ஒதுக்கிடாமல்
பொறுப்பாக நடந்துக்கோங்க...