என் காதல்
ஒரு நொடி மின்னலாய் ........
நெடுஞ்சாலை கானல் நீராய் ...........
அவள் அறிமுகம் .........
மௌன மொழிகளில் அவள்
கண் ஜாடை பேச்சு .........
என்னை நோக்கி தந்தி அடிக்க...........
என்னை அறியாமல் என் உதடுகள்
அவள் பேரை அவளிடமே வினவ ......
நிசப்த பதில்கள் ............
எப்படி அவள் பேர் அறிய ?
அவள் போல்
நானும் இன்று தான்
கல்லூரிக்கு அறிமுகம்......
பின்பு அறிந்து கொள்ளலாமா ?
மனம் இப்போதே அறிய துடித்தது .......
சிறிது நேரம் விழிபேச்சு தொடர
அவளது உதடுகள் இரண்டும்
இணை பிரியாமல் ஒன்றை
ஒன்று தழுவி கொண்டிருந்தன !..
எப்போது அவள் திருவாயின்
முதல் சொல் கேட்பேன் ........? என்ற
ஏக்க பார்வையையும் என்
விழி பேச்சில் வெளி படுத்தினேன் ...........
அவள் விழிகள் மூடின ..........
ஐயஹோ ........குரல் பேச்சும்
கேட்க முடியவில்லை ..........விழி பேச்சும்
தொடர இயலவில்லை ..........
என்ன செய்வது ?.........
அவள் விழிகள் ஏன் அவளது இமைகளால்
சிறைபட்டது .......எதற்காக அவள் கண்களை
மூடினாள்?? .......என்ற நினைப்பில்
நான் ..........
கனவுகளில் பேசலாம் என நினைத்து
என் விழிகளையும் நான் மூடிக்கொண்டேன் .......
நிமிடங்களில் அவள் என் கனவு உலகின்
அரசி ஆனாள்........
ஒரு முறை கூட விழி திறந்து
அவள் முகம் காண
மனம் துடித்தது ..........
விழி திறந்தேன் அவள் இல்லை ..............