சொல்லாமலே
சொல்லாமலே
இருவரும் வாழ்கிறோம்
எப்போது சொல்வோம்
நீ சொல்வாயா?
நான் சொல்வேனா?
நீ சொல்லட்டும் என்று நானும்
நான் சொல்லட்டும் என்று நீயும்
எப்போது சொல்வோம்?
மணம் முடித்து ஆண்டு 5 ஆகிவிட்டது.
நம் காதலை எப்போது
மனம் விட்டு சொல்வோம் !