நான் நலம் நீங்கள் நலமா
****காசு தேடி
கடல் கடந்தேன்:'(
****கத்தாரில்
கால் பதித்தேன்,
****ஊரில் உயிரை
விட்டு உடல் மட்டும்
****வான் ஊர்தியில்
சென்றது ஏனோ!:'(
****காஞ்ச பூமியில
கருவாடா காயிறேனே!
****நீரில்லா வனத்திலே
நித்தமும்நான் வாடுறேனே!!
****ஊட்டி வளர்த்த இரத்தத்தை
இங்கு வியர்வையா சிந்துறேனே!
****மொழியறியா நாட்டினிலே
தெருநாயாய் தெரிகிறேனே!!:-!
****சொந்த பூமியில
சோத்துக்கு பஞ்சமில்ல!
****இந்த பூமியில
தாகத்திற்க்கு தண்ணீரில்ல!!
****மந்தையில ஆடாக
மாட்டிக்கொண்டு முளிக்கிறேனே!
****மதிகெட்டு இந்த மடையனும்தான்
மயானத்தில் தெரிகிறேனே!!
****காசோடு கண்ணீரும்
மருந்தாக்கி தருகிறதே!
****வலியோடு உடலிங்கே
வயதாகி தளர்கிறதே!!
****என் சோகங்களை சுருட்டி
தலையனையில்
புதைத்து கொண்டேன்!!
****சோர்ந்த கண்களை
மூடிக்கொண்டு
சோக கனவு காண்கிறேன்!!
**என் சொந்தங்கள் சந்தோஷம் காண
என் சோகங்களை புதைத்து விட்டு
**சந்தோஷ புன்னகை கொண்டு
கைப்பேசியில் கதைக்கின்றேன்!!!
****இங்கு நான் நலம் அங்கு நீங்கள் நலமா?...........****