உன்னத நாளுக்காக
" @@@ உன்னத நாளுக்காக..!! @@@ "
என்நுரையீரல் நுழையுங்காற்று
உன்பெயர் சொல்லிக்கொண்டே
உதிரத்தில் கலக்கிறது!
என்இரத்த அனுக்கள்
உன்பெயர் சொல்லிக்கொண்டே
உயிர்பித்துக் கொள்கிறது!
உன்கனவுகள் சேர்க்கவே
என்மூளை பகலிரவெல்லாம்
நிகழ்வுகளை பதிக்கிறது!
உன்சிந்தனைகள் வளர்க்கவே
என்இதயம் நாள்முழுதும்
உணர்வுகளை விதைக்கிறது!
என்கண்கள் ஆசைதேக்கி
உன்வருகை பார்த்திருக்கிறது
பார்வைபூக்களை அள்ளித்தூவ!
என்உதடுகள் வார்த்தைகூட்டி
உன்மீதான நேசம்சேர்க்கிறது
அன்புசொற்களை அள்ளித்தெளிக்க!
என்மனது காத்துகிடக்கிறது
உன்இன்ப இம்சைகளை
ஆனந்தமாக சேமித்துக்கொள்ள!
என்வாழ்க்கை தவித்துக்கிடக்கிறது
உன்னோடு கலக்கும்
உன்னத நாளுக்காக..!!