காதலுக்கு நினைவஞ்சலி - குமரிபையன்

காமத்தால் கன்னிகளின்
கற்பதனை களவாடும் நாட்டில்
கண்ணியமாய் காதலித்தாய்..
கைவிட்டு போகுமென்று
கலங்காமல் கைபிடித்தாயென்னை..!
சாதித்தாள் என சொல்லி...
கயிற்றை முத்தமிட்டு
கல்யாண பரிசளித்தார் என் தந்தை..!
சாதித்தான் என சொல்லி...
உறவு வைத்தது ஊருக்கு சாதி தீ..!
சதி தீயில் எனை வீழ்த்தி
சவக்குழி தந்தாள் என்னன்னை ..!
தாலி போட்ட உன்னை நான்
தண்டவாளத்தில் போட்டேன்..!
தனிமையில் விட்டுவந்தேன்
தனிமையாக்கி நீ போனாய்..!
இது என் தலையெழுத்தா.. ?
இல்லை தலைவர்கள் எழுத்தா..?
இனம் காண இயலவில்லை..
இனி ஏதடா வாழ்க்கை,,?
இழந்துவிட்டேன் காதலோடு
மாலையிட்ட மன்னவனை
இதயம் சிதறியதால்
இழந்துவிட்டேன் உணர்ச்சிதனை..
இளவரசா..
நீ இறந்தாலும் வாழ்கின்றாய் என்னோடு
நான் வாழ்ந்தாலும் இறந்துவிட்டேன் உன்னோடு..!
---திவ்யா
_____________________________________________________
(சாதி கொடுமையால் சருகான காதலுக்கு (04.07.2013) நினைவஞ்சலி..!)