அந்த பூவைக்கு நான் பூ கொண்டு வருவேன்

எட்டும் தொலைவில் இல்லை எனினும்
எட்டி, எட்டி பறித்திடுவேன் என்னவள்
விரும்பும் பூ மலரையே
ஒத்தை மலை உச்சியிலே, செங்குத்தான
இடத்தினிலே ஒரு பூ மட்டும் பூத்து
கண்ணை தானே பறிக்குது
உடல் நடுங்கினாலும், ஒரு அடி எடுத்து
வைக்கவும், அந்த மலை ஏறிடவே,
ஏறிடுவேன், பூ பறித்து கொண்டு
வந்து எந்தன் பூவைக்கு தந்திடவே
வித்தை ஒன்றும் இல்லை இதில்,
வெறும் காதல் என்ற உணர்வில்
ஒன்றி விட்டேன் நான்,
முகம் மலர்ச்சி கண்டிடவே என்
முழுவதையும் தந்திடுவேன், அக
மகிழ்ந்து அவள் சொல்லும் ஒரு
வார்த்தை எனக்கு தேவகானமே
அந்த வகை ரதியுமில்லை, எந்த
வகையில் பார்த்தாலும் அவள்
ரம்பையுமில்லை, என் மனதை
திருடி கொண்ட கள்ளி அவள்
என் உயிரில் கலந்து விட்ட
இன்னுயிருக்கு சொந்தம் அவள்
சொத்தும் அவள் தான், சொந்தமும்
அவள் தான், மொத்தமும் அவள்
தான்,
சுகமும் அவள் தான், சுவையும்
அவள் தான்,
அந்த பூவைக்கு நான் பூ
கொண்டு வருவேன், அது
எங்கிருந்தாலுமே....