தாயின் அன்பு
தவிக்கின்ற மனமும்
தொடர்கின்ற நினைவும்
தூங்காத கண்களும்
துடிக்கின்ற இதயமும்
அவளுக்கு தெரியும்
அவள் நினைவெல்லாம்
வெறும் கனவுதான்
விடிந்தால் கலைந்து விடும்
இரவெல்லாம் கண்மூடிக்
கட்டிய கோட்டை எல்லாம்
கனவாகக் கரைந்து விட
விழித்தாள் விடியலை நோக்கி
அம்மாவின் அழைப்பில்
அன்பு திளைத்திட
அணைக்கின்ற கரங்களில்
அடக்கினாள் தன் நினைவுகளை
பெண்ணின் தயக்கம் புரிந்தது
பார்த்தாள் மறு நாளே
மாப்பிள்ளையை
பிடித்தது இருவருக்கும்
திருமணம் நிச்சயம் ஆயிற்று
பிள்ளையின் ஒவ்வொரு
நினைவுகளும் தாய்க்கு தெரியும்
அதுதான் அன்பின் அடைக்கலம்