என் புன்னகை பூவே 555

மலரே...

என்னை படைத்த
இறைவன்தான்...

உன்னையும் படைதான்...

நீ அதிசயம் தான்
அவனின் படைபிற்கு...

அவனின் படைபிற்கு
நீ அற்புதம்தான்...

இதழ் விரித்து புன்னகையோடு
மலர்கிறாய்...

புன்னகையோடு மடிகிறாய்...

தினம் தினம் மலர்கிறாய்
நிரந்தரமாய் இருக்காமல்...

பாவையின் கூந்தலிலும்
ஏறுகிறாய்...

இறைவனின் தோள்களிலும்
மாலையாகிறாய்...

கல்லறையிலும் மௌனம்
கொள்கிறாய்...

உன் அழகிற்கு இணை
உலகில் எதுவுமில்லை...

இன்பம் இல்லை...

துன்பம் இல்லை...

சோகம் இல்லை
கண்ணீர் இல்லை...

புன்னகை மட்டுமே
உனக்கு...

ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னை போல்
வாழ்ந்துவிட ஆசைதான்...

எப்போதும் புன்னகையோடு
இருக்க...

புன்னகை பூவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Jul-14, 8:46 pm)
பார்வை : 279

மேலே