மீண்டும் வானம்பாடி
வானம்பாடி நீ பறவை இனம்
வர்ணிக்கும் நானோ பாவலர் இனம்
வண்ணங்கள் உனக்கு சிறப்பு தரும்
வார்த்தைகள் எனக்கு வாழ்க்கை தரும்
வானம் தானோ? உந்தன் எல்லை
வையம் தானோ? உந்தன் இல்லம்
வரங்கள் தருவது மரங்கள் தானோ?
வீடுகள் அமைப்பது மரக்கிளைகளில் தானோ?
வட்டம் இடுவது விண் பரப்பிலோ?
வான வெளியிலோ? பாடி திரிவது
வான்மேகம் உந்தன் விளையாட்டு துணையோ?
வானம்பாடி என்ற பெயர் அதனாலோ?
வங்ககடல் வியந்தது வானத்தை பார்த்தே
வெண்ணிலவும் சிரித்தது பூமியை பார்த்தே
விண்மீன்களும் கண் சிமிட்டியது வானிலே
மீண்டும் வானம்பாடி விரித்தது சிறகுகளையே