நீரின் நிறம் கறுப்பு
நீருக்கு நிறமில்லை
பொய் சொன்னது விஞ்ஞானம்
நீரின் நிறம் கறுப்பு;
ஐயமெனில் கேளுங்கள்;
நீர்குடித்த வெண்மேகம்,
கறுத்து கார்மேகமானதேன்...
நீர்கொடுத்த மழைமேகம்,
வெண்பஞ்சு மேகமாய்
மாறிப் போனதேன்....
ஆகவே....
உரக்கச்சொல்வேன்;
நீரின் நிறம் கறுப்பு.