இரவின் அமைதி

இரவே நீ வாழ்க!

பகல் எதற்கு மறைத்துவிடு
பக வானே சுழற்றிவிடு.
பகை யான சூரியனை
வதை செய்து ஒழித்துவிடு.

சேர்த்து வைக்கும் இரவுக்கு
செழித்து இருக்கும் செல்வாக்கு
கடவுளே உன் கருப்பு
காதலுக்குத் தான் சிறப்பு.

பிரிக்க எழும் விடியலே
இறுக் கத்தில் நுழையாதே!
திறந்து வரும் வெள்ளொளியே
இறந்து போ வேண்டாமே!

பகலே நீ!அகலே நீ!
பாவத்தின் துணையே நீ!
இகலே நீ!இடரே நீ!
இவ்வுலகத் தொல்லை நீ!

இரவே நீ! உறவே நீ!
இனிகாதல் உலகே நீ!
சுகமே நீ!நிதமே நீ!
சொர்கத்தின் நிசமே நீ!

இரவின் அமைதி காதல்
இயற்கை விளக்கமாம்.
அருமை உறவின் திருமை
கருமை அதனுள் இரகசியமாம்.

பசியில்லா இன்பமே!
பற்றில்லா மயக்கமே!
இணையில்லா வள்ளலே!
இரவே நீ வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (7-Jul-14, 3:23 pm)
Tanglish : iravin amaithi
பார்வை : 193

மேலே