மாநபியே

பாலையில் முளைத்த
பனிமலரே ..
பாவங்கள் தொலைத்த
பகல் நிலவே ..

பூமிக்கு வந்தாய் தூதராய்
புண்ணியம் தரவல்ல சீடராய்...

நேர் வழி எதுவென்று காட்டி தந்தாய்
நெஞ்சிலே ஈமானை கூட்டி சென்றாய் ..

சத்திய மார்க்கம் இதுவென்றாய்
சங்கடம் தீர்க்க வழி தந்தாய் ..

ஒரே இறைவன் என்றாய்
உடன்பட்டால் சொர்க்கம் என்றாய் ...

மக்காவில் தொடங்கிற்று உன் சகாப்தம்
மதீனாவில் முடிந்தது உன் நிசப்தம் ..

ஓங்கி ஒலித்தது உன் ஓரிறை கொள்கை
உலகே வியந்தது உன் உண்மையின் எல்லை ..

உலகை மாற்றிய உத்தம நபியே ..
உயிர்கள் எல்லாம் உந்தன் வழியே ...!!!

எழுதியவர் : (7-Jul-14, 2:30 pm)
பார்வை : 94

மேலே