நெடு வானில் என் நிலா -பாகம் 3

பாகம் 3:

கொல்லையில நீ பதுச்ச வாசமுள்ள செம்பருத்தி,
எனக்குனு பொறந்த அத்த மக நீ ஒருத்தி,
உழவு மாட்ட ஒட்டி போனா கூட,
தாங்க மாட்டா(ன்) உன் அப்ப(ன்),
உன்ன என் கையில் புடுச்சுக் கொடுத்து,
பாய் மரமா நிக்குராண்டி!

தண்ணி வில கூட,பால் விலக்கு மேலனு,
பாலு தண்ணி கூடக் கலக்க,
வெக்க படர காலமடி!
இதுல
உன் அழகான கருங்காலுக்கு,
சிலம்பு போட நெனச்சது,
என்ன கோலமடி!

துண்ட உதறி தோல்ல போட்டு,
விலய கேட்டேன்,
தோல உதறி துண்டில் போட்டதடி,
அவன் சொன்ன வில!

சிலம்புக்காக சண்ட போட,
கோவலனும் நா இல்லையடி!

இது தான் இந்த எழப்பட்ட விவசாயிக்கு,
நாடு கொடுத்த உதையோ?
இல்ல,
வானம் செஞ்ச சதியோ?

கூலி சனம் ஏசுமுனு,
கூட வந்து வேல செய்வா!
சாதி சனம் பேசுமுனு ,
சலிக்காம சீரு செய்வா!

இந்த பத்து வருஷக் காலத்துல,
ஒரு பட்டு புடவ கேட்டதுல!
இந்த பட்டு பூச்சிக்கு,என்னக்குமே
பட்டுடுத்தும் ஆச வந்ததில!

நூலு சேலனாலும்,
நூறு பேருகிட்ட எடுத்துக் கட்டுவா!
பாப்பம்பட்டி சேலையையும்,
பட்டணமுனு பச்சப் புளுகு புளுகிடுவா!

-கிராமிய நடையில் பெண்மை புகழ் தொடரும்...வரும் நாட்களில்!







,

எழுதியவர் : பாரி (8-Jul-14, 12:23 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 76

மேலே