அழியாத நட்பு

தோழனே ...

அதி ஆழமான
பாழ்கிணறு என் தனிமை
அதில் நீரை சுரந்தது உன் நட்பு..

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிக்கடி பேசி கொண்டோம்...!!
காற்றுக்கு வடிவம் கிடையாது
நம் நட்புக்குள் பொய்கள் கிடையாது...

காதல் , நட்பு இரண்டுமே தமிழ் சொற்கள் தான்
காதலோ அழகை பார்த்தது,
நட்போ அன்பை பார்த்தது....!!!

எத்தனையோ இரவுகள் எனக்காக
தூக்கத்தை தொலைத்தாய்
உனது தோள்கள் எனக்காக -என்று
தெரிந்து தான் சோகங்கள் என்னை துரத்துகின்றதோ..!!!

கவலைகளை மறந்து இன்று
காற்றோடு கை கோர்த்து பறக்கிறேன்
தோழனான உன் அறிமுகத்திற்கு பின் ...!!!

எத்தனை யுகங்கள் சென்றாலும்
நீயும் நானும் சந்தோசமாய் இருந்த
நாட்கள் மறந்து போகுமோ..!!!

மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
அதிலும் உனக்கு தோழியாக -பிறந்து
வாழ வேண்டும் என்ற பேராசை...!!!

தனியாய் நடந்து செல்லும் போதும்
நீ என்னோடு தான் இருக்கின்றாய்
என்ற ஒரு உணர்வு -இது
போதாதா நம் நட்பின் அடையாளத்திற்கு ...!!

எழுதியவர் : பாரதி வினய் (8-Jul-14, 1:12 pm)
Tanglish : aliyatha natpu
பார்வை : 1211

மேலே