தாலாட்டும் இதயம்

என்னவள் உறங்க
மெத்தை விரிக்கிறேன்
என்னையே!
மார்போடு சாய்ந்தவளுக்கு
தாலாட்டு பாடுகிறேன்
இதயதுடிப்பினால்!
குளிருக்கு இதமாய்
போர்வை விரிக்கிறேன்
எனது கைகளை!
முத்தை உள்ளடக்கிய
சிப்பியாய் காத்து நிற்பேன்
என்றும் அவள் அருகே!