இப்படிக்கு காதல்
அன்பு அத்தான் ...
பட்டினத்தில் நீ
பட்டினியில் நான்
கட்டிக் கொள்ளச் சேலை
கொண்டு வரும் வேலை
எம் மனம் பறக்கும் வானில் !!
உடுத்தும் சேலையில்
உன்னையே கட்டிக் கொள்வதாய் எண்ணி
பட்டாம் பூச்சு மனதில்
தொட்டு போகும் தேனீ நீ !
ஒவ்வொரு விடியலும்
யுகமாய் கழியுதிப்போ !
அன்றொரு நாள்...
நீ அனுப்பிய கடிதம்
தினமும் வணங்கும் தெய்வமானது
தினமும் பலமுறை படித்தும்
புதிதாய் தோன்றும் சொர்க்கமது !!
ஊருக்குள் வண்டிச் சத்தம்
கேட்டால் ஓடோடிவந்து
சாலையை வெறிக்கப் பார்த்து
தூக்கத்திலும் காதில் ஒலிக்கிறது
எப்போது நீ வருவாய் ...
தினசரி ஏடுகள் மீது என் கோபம்
நீ வரும்போது விரைவாக செல்லாமல்
நீ வந்தபின் வெகு வேகம் எடுப்பதாலே
இந்த முறை உன்னை விடுவதாய் இல்லை
என் கழுத்தில் முடிச்சியிட்டு
உன் காலை கட்டிவிட
ஆவலுடன் காத்திருக்கிறேன்
நிச்சயத்த நாள்முதல்
உன் நினைப்போடு வாழுகின்றேன்
விஞ்ஞானம் வளர்ந்தும்
என் மனம் படும்பாட்டை
உரைக்க கடுதாசி விட்டால்
கதியேது நமக்கு
விரைவாக வருவாய் என
எதிர்பார்ப்புடன் ...
இப்படிக்கு
காதல் ...