உன் நினைவுகளுடன்

எனக்கே அறியாமல் என்னுள்
காதல் தீயை விதைத்தாய்..

உன்னை நான் காதலிப்பது தெரிந்தும்
தெரியாதது போல் நடிப்பது ஏனடா...

நீயோ எளிதாக சொல்லிவிட்டாய்
என்னை பற்றி யோசிக்காதே
என்னை தொடர்பு கொள்ளாதே
குறுஞ் செய்தியும் அனுப்பாதே -என்று.

இதயம் அந்த நொடி முதல்
உன்னை மட்டுமே நினைக்குறது ...

உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
என்னில் அழியாத
காயங்களை ஏற்படுத்துதடா....

அவ்வப்போது என்னோடு பேசி
உன் புன்னகையால் என்னை
மெய் மறக்க செய்வாய்..

மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
உன் புன்னகையின் சத்தம்
உன் மௌனங்களின் வார்த்தைகள்

தனிமை என்னை கொல்லுதடா
உன் நினைவுகளால் ..

ஒரு முறையாவது சொல்லிவிடு
காதலிக்கின்றேன் என்று ...

அந்த ஒரு வார்த்தையில் எனது
இந்த வாழ்வு அர்த்தம் பெரும்...

எழுதியவர் : பாரதி வினய் (10-Jul-14, 11:15 am)
Tanglish : un ninavugalutan
பார்வை : 170

மேலே