நீ வேண்டும்
சிந்தனைக்கு தூண்டு கோளாய்
நீ வேண்டும் !
முன்னேற்றத்துக்கு உற்சாகமாய்
நீ வேண்டும் !
வெற்றிக்கு பரிசாக
நீ வேண்டும் !
தோல்விக்கு தைரியமாக
நீ வேண்டும் !
மகிழ்ச்சிக்கு புன்னகையாக
நீ வேண்டும் !
அழுகைக்கு ஆறுதலாக
நீ வேண்டும் !
சுவாசிக்கையில் காற்றாக
நீ வேண்டும் !
உழைப்பிற்கு ஊதியமாக
நீ வேண்டும் !
நடக்கையில் நிழலாக
நீ வேண்டும் !
என்றும் நீ வேண்டும் என்னுடன்
நம்பிக்கையாய்,
நடப்பாய் ,
நண்பனாக.