விபச்சாரி
வந்த காசுக்கு மதிப்பும் இல்லை
விற்ற பொருளுக்கு விலையுமில்லை
விரக்தி வாழ்க்கை பிடிக்கவில்லை
விட்டு செல்ல வழியுமில்லை
விதியின் பலன் விளங்கவில்லை
விருப்பப்படி வாழ்க்கை இல்லை
வம்பு தும்புக்கு பஞ்சமில்லை
வழக்குகள் கண்டு பயமுமில்லை
வயது வரை வாழ்க்கை உண்டு
வயோதிகத்தில் வாழ துவண்டு!