விதி ,செய்த சதி

ஆணுக்கு துணையாக பெண்ணை படைத்தான் இறைவன்
அந்த பெண்ணால் இறைவனை மறந்தான் மனிதன்
தன் மகனை இல்லத்திலும் இதயத்திலும் வைத்து பாதுகாத்தால் அன்னை
அவளை துன்பத்திலும் துயரத்திலும் ,பெரும் தூரத்திலும் விட்டுச்சென்றான் ,
அதே பெண்ணால் !
தேவதையை தேடினான் ,அவன் வாழ்க்கை தேடல் இன்றி போனது
அவன் ,
அறியாமையால் தன் வாழ்வை தொலைத்தான்
அதை அறியும்போது அவன் வாழ்க்கையை பறித்தான் ,
இறைவன் !
இது விதியா!
இல்லை
அது செய்த சதியா????

எழுதியவர் : prisilla (10-Jul-14, 6:48 pm)
சேர்த்தது : Mariya
பார்வை : 204

மேலே