கனவிலோர் கனவு, அதிலும் கண்ணீரே-வித்யா

கனவிலோர் கனவு, அதிலும் கண்ணீரே-வித்யா

ஒருநாள்......
தோல் சுருங்கிய என் கைகள் நடுங்குகின்றன
கைத்தாங்கலாக உன் கைகளோடு......
நடை போடும் பாதங்கள் உன்னோடு............!

வெள்ளிக்கம்பியென தலைமுடி
வெளுத்திருக்க......
என் நேற்றைய நேற்றுகளை
நினைத்தவளாய் இன்று உன்னோடு..............!

உன் கைகளோடு என் கை கோர்த்துக்கொள்கிறேன்
உன் கைகள் என்கைகளை
இதமாக்கிக்கொண்டிருக்கின்றன........!

பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு........
பூங்கா இருக்கையில் நீயும் நானும்
பறவைகளுக்கு இறை நீட்டுகிறோம்........!

நிசப்தம் விரும்பி எதுவும் பேசாமல்
ஓரிரு பற்கள் தொலைத்த புன்னகையோடு
விழிகள் வெளுத்த பார்வைகளோடு சிறு ஊடல்.........!

காதல் கொண்டு
நீ நீட்டிய பூக்கள் ஏற்று
வானம் தொட்டு
விண்மீன் விழுங்கி
சூரியக்கதவுகள் திறந்து
நிலவின் ஒளிதிருடி
வெவ்வேறு அண்டங்களில்
ஒழிந்து கண்ணாமூச்சியாடி
ஆசிக்கொன்றும். ஆஸ்திக்கொன்றுமாய் பெற்று,
வழியனுப்பி, தாளாத தனிமையில்
உன் தோளில் தலை சாய்வதாய் ஒரு கனவு..........!

எல்லாம்
கனவென்றரியும் போது
வானை வெறித்துப் பார்த்து
இங்கிருந்து நானும்
அங்கிருந்து நீயும்
விண்மீனையும், நிலவையும்
மாறி மாறி பரிசளித்துக்கொண்டே
வாழப்போவதை நினைக்கும் போது
கண்ணீர் கரைபுரண்டோடுகிறது............!

கருமேகங்கள் செவ்வானத்தில்
சங்கமித்துக்கொண்டதொரு உணர்வு...........!







*********காதலுடன்
-வித்யா

எழுதியவர் : வித்யா (11-Jul-14, 9:28 am)
பார்வை : 114

மேலே