கண்ணனும் கவிஞனும்

வாமனம் விசுவரூபம்
கண்ணனுக்கும்
கவி பண்ணும் கவிஞனுக்கும்
சாத்தியம் !
அவன் காலடியில்
மகுடம் தாங்கிய மன்னனும்
பணிந்து நிற்பான் !
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
மண்கண்ட வெண்குடைக் கீழ்ப்பட்ட மன்னருமென்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் .... குமரகுருபரர்.