சங்கொடுவா ராமா நுசம் - விவேக்பாரதி

கன்னியப்பன் தாத்தா எழுதிய ஈற்றடி ஒன்றில் எனது முயற்சி இரு வெண்பாக்கள் :

சாப்பாடு ஆளுக்கன்(று) ஆடைக்கே என்றுசொல்ல
கூப்பிட் டுணவளித்தேன் சட்டைக்கு - ஏப்பஒலி
இங்குவர வில்லையே உணவிருந்தால் உண்டமிச்
சங்கொடுவா ராமா நுசம்

விருந்துண்ண மாமியார் நல்லழைப்பு விட்டால்
இருப்பதோ ஒற்றைக்கந் தல்தான் - விரும்பியதோர்
தங்கத்தில் தண்டையும் குண்டலமும் பட்டுக்கச்
சங்கொடுவா ராமா நுசம்

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (11-Jul-14, 11:31 pm)
பார்வை : 100

மேலே