இவர்கள் இப்படித்தான்
கதிரவன் சொல்லவில்லை
என்னைக் காணாதே என்று
மலர்கள் சொல்லவில்லை
என்னைப் பார்க்காதே என்று
தென்றல் சொல்லவில்லை
என்னில் திளைக்காதே என்று
அருவி சொல்லவில்லை
இங்கே குளிக்காதே என்று
சோலை சொல்லவில்லை
என்னை ரசிக்காதே என்று
சோலைக் குயில்கள் சொல்லவில்லை
என்னைக் கேட்காதே என்று
மாலை சொல்லவில்லை
என்னிடம் மயங்காதே என்று
நிலவு சொல்லவில்லை
என்னை எழுதாதே என்று
கவிஞன் சொல்லவில்லை
எழுதியதைப் படிக்காதே என்று
ஆயினும் சிலர்
விலகியே செல்கிறார்கள் !
இவர்கள் மனம் மூடிக்கிடக்குது !
----கவின் சாரலன்