எமனின் தூதர்கள் நம் அருகில் வராமல் அகற்றுவது எப்படி

‘காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
...கடவூர் வீரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
...வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவில்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
...கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
...நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே’

- திருநாவுக்கரசர் அடைவுத் திருத்தாண்டகம்.

சிவபெருமானின் வீரச்செயல்கள் எட்டு.

1. பிரமனின் சிரத்தை அரிந்த காவிரியின் கரையில் அமைந்த கண்டியூர் வீரட்டானம்.
2. காலனை மார்க்கண்டேயனுக்காக உதைத்த திருக்கடவூர் வீரட்டானம்.
3. திரிபுரத்தை எரித்த விரும்பிப் போற்றும் திருவதிகை வீரட்டானம்.
4. யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய வழுவூர் வீரட்டானம்.
5. தக்கன் வேள்வியைத் தகர்த்த திருப்பறியலூர் வீரட்டானம்.
6. அந்தகாசுரனை அழித்த இடபத்தை ஊர்தியாகக் கொண்ட திருக்கோயிலூர் வீரட்டானம்.
7. காமனை எரித்த திருக்குறுக்கை வீரட்டானம்.
8. சலந்தராசுரனை அழித்த தலைமை மிகு விற்குடி வீரட்டானம்.

எனவே இந்த எட்டு வீரட்டானங்களையும் கூறி நாவில் நவின்று உரைப்பாரின் அருகில் எமதூதர்கள் சென்றால்,
இவர்கள் சிவபெருமானின் அடியார்கள் என்று அறிந்து அகன்று விடுவார்கள் என்பது திண்ணம்.

ஆதாரம்: 17.08.2012 தேதிய ஸ்ரீ குமரகுருபரர் திங்களிதழ்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-14, 1:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 231

மேலே