வெற்றிடம்-2 தொடர்ச்சி

நாளுக்கு நாள்
வெறுமை பெருகி
விரக்தி யானது ...
அறிவும்,செயலும்
அடங்கி போனது....
இறைவன் தேடி
செல்பவன் கூட
என்றோ ஒருநாள்
அடைந்திட கூடும்...
இதயம் கொண்ட
வெற்றிடம் என்று
இதமாய் நிறையும்?..
இதமாய் நிறையும்?..
கேள்வி ஒன்றே
இவன் வேள்வியானது...

உண்ண மறந்தான்..
உறங்க மறந்தான் ..
ஊரை மறந்தான்...
பேரை மறந்தான்..
நித்தம் புலம்பியும்
சித்தம் குழம்பியும்
பித்தர் போலவே
சுத்தித் திரிந்தான்...
இறைவனை வணங்க
இறைவனோ டிணங்க
மறந்தே போனான்
மரம் போலானான்..

'எங்கே தேடுவது?.'
இரண்டாம் பட்சம்...
'எதைத் தேடுவது?' என்பதே
அறிவின் உச்சம்....

நன்மைகள் நிரப்பிடுமா?..
உண்மைகள் நிரப்பிடுமா?...
நம்பிக்கையின் இறுதிமுடிச்சும்
அவிழ்ந்து போனது...
நல்லவன் தோற்பதில்லை..
முயற்சி திருவினையாக்கும்...
பொய்யோ இவையெல்லாம்..?
அய்யோ என அழுதான்...
அந்த ஆழமான
அழுகையின் முடிவில்...
அமைதியானான்...
மெல்லத் தெளிந்தது மனது!!!
ஆனந்தம் அடைந்ததாய்
அடையாளம் காட்டியது அறிவு...
அடைவதில் அல்ல...
தேடுவதில்..இருக்கிறது நிறைவு!!
ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல
அறிஞனின் அழுகையிலும்
கைகூடும் கட உள் ஞானம்!!!!

அருகிருக்கும் விசயத்தை...
அற்புதத்தின் அதிசயத்தை...
அகிலமெங்கும் தேடித் தேடி
அல்லும் பகலும் ஓடி ஓடி
இறுதியில் காணும் வெற்றிடம் ஒன்றே
உறுதியாய் நமக்கு உறைவிடம் என்றே
சிந்தை குளிர்ந்து
சிரிக்க தொடங்கினான்...
இது மரணம் அல்ல...
மறு வாழ்வென்று
புரிந்த நொடியில்
மீண்டும் பிறந்தான்...

இப்போதும் அவன் ஏழை தான்,
முஸ்லிம்தான் !...
ஆனால் பாவமல்ல!!
பக்குவபட்டவன்....
தேடுதலின் முதல்படியில்
தொடங்கும் ஞானம்
நீ மரணித்தாலும்
மறையாதது!!!.......
தேடாதவன் முஸ்லிமாக
இருக்க முடியாது...
அப்படி ஒரு சரித்திரம் கிடையாது !! -அபி

எழுதியவர் : அபி மலேசியா (13-Jul-14, 4:21 am)
பார்வை : 68

மேலே