கற்றவை பற்றவை-போட்டிக்கவிதை

உதிரத்தில் வெண்மை
உருவத்தில் இறைமை
உணர்வில் அண்மை
கருவில் சுமந்தவள்
என் அன்னை

பாசத்தில் இமயம்
பாதுகாப்பு மிஞ்சும்
பாலகன் என்னை
தினமும் கொஞ்சும்
இறை நிலா

பசியால் அழுவதுதான்
என் குணம்
பாசத்தால் தழுவதுதான்
அவள் இனம்

பத்து மாசம்
அவளின் கற்பம்
வாழும் காலம்
அவளின் பக்கம்
அவள் பாதமே
எந்தன் சொர்க்கம்

எனக்கு காய்ச்சல்
விழித்தவள் அவள்
எனக்கு கௌரவம்
உழைத்தவள் அவள்
எனக்கு பொன்னாடை
எல்லாம் அவளாலே

என் ஆதி
என் அந்தம்
என் ஆவி
எல்லாம் அவள்தானே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (13-Jul-14, 5:02 am)
பார்வை : 75

மேலே