என் உயிரில் கலந்த இசையே சஹானா தென்கிழக்குச் சீமையிலே வைரமுத்துவுடன் ஒரு பயணம்

என் உயிரில் கலந்த இசையே சஹானா தென்கிழக்குச் சீமையிலே வைரமுத்துவுடன் ஒரு பயணம்

நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம்! அப்பொழுதெல்லாம் அதிகமாக யாருடைய வீட்டிலும் டிவி கிடையாது! ஏதாவது விழாக்கள் நடக்கும் பொழுது எங்கள் வீட்டருகில் டிவியில் டெக் வைத்து கேசட் போட்டு சினிமாப் படங்கள் போடுவார்கள்! அன்று அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா அப்பொழுது "கிழக்குச் சீமையிலே" திரைப்படம் போட்டுக் காட்டினார்கள்!

என் அப்பா எங்களை எங்குமே விட மாட்டார்! அதுவும் மாரியம்மன் கொடை என்றால் சுத்தம் சொல்லவா வேண்டும்! நானும் தங்கையும் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அவர் மசிவதாக இல்லை! அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும் ம்ம்கும் ஒரு பதிலும் இல்லை! என்ன மனமோ அவருக்கு? ஒருவேளை கல்லாக இருக்குமோ?அழுதழுது கண்கள் வீங்கிப் போய் தூங்கப் போனேன் தூக்கம் வருமா? சினிமா துவங்கியாச்சு! சத்தம் காதுக்குள் நுழைந்து என்னை என்னன்னவோ செய்கிறது! ஆம்பிளப் பிள்ளை என்றால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறலாம் பொம்பளப் பிள்ள வேற என்ன பண்றது? தூங்க வேண்டியதுதான்!

ஆனா எங்கே தூக்கம் வரும்? படத்தின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தேன்! அதில் தாய்மாமனாக விஜய குமார் நடிக்கவில்லை வாழ்ந்தார்! தங்கையாக நம்ம "சித்தி" ராதிகா நடிக வேளின் மகளுக்கு நடிக்க சொல்லிக் கொடுக்கவே வேண்டாம்!
"தாய்ம்மாமன் சீர் சுமந்து வாராண்டி ஒரு தங்கக் கொலுசு கொண்டு வாராண்டி" என்ற பாடல் வரிகள் காதுக்குள் நுழைந்து என்னை திக்கு முக்காடச் செய்கிறது! இன்னொருப் பாடல் "ஆத்தங்கர மரமே ...... அட இப்பாடலில் மாமன் மகனும் அத்தை மகளும் செம! சொல்ல வார்த்தையில்லை! நானும் என் மாமன் மகனை மிஸ் பண்ணிட்டேனோ............? அது கிடக்குது கழுதை!
ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது

மாமனே ஒன்ன கானாம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி மாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
ஒம்பெயர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம்
கத்தியே ஒம்பெயர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே

தாவணிப் பொன்னே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத
பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா
மாமம்பொன்னே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம்
மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது
அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது
ஆத்தங்கர மரமே
அரசமர இலையே
ஆலமரக் கிளையே அதிலுரங்கும் கிளியே
ஒவ்வொரு வரிகளும் வைரமுத்துவின் கைகளில் வரம் வாங்கி வந்ததுவோ? அடடடா வர்ணிக்க வார்த்தையில்லை!

இவ்வரிகள் என் வாயில் அடிக்கடி வந்து போகும்!
ஆத்துல மீனும் சொகந்தானா
ஐத்தயும் மாமனும் சொகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த
திண்ணையும் சொகந்தானா........

மாமன் மகனை அத்தை மகளை மிஸ் பண்ணினவங்க தயவு செய்து ரொம்ப பீல் பண்ணி இந்த பாடலைக் கேட்க வேண்டாம்! தாங்க முடியாது!

இன்னொரு பாடல் என்னை விட்டுப் போகாத வரிகள் சாகும் கடைசி நிமிடத்திலும் கேட்டுவிட்டு சாகலாம்! நினைத்தாலே அழுகை முட்டிக்கொண்டு வரும்! முடியல கேட்டு கேட்டு அழலாம்! சித்ரா
"தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு" என்று துவங்கும் பொழுதே கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது! ஒரு கிராமத்து அண்ணன் தங்கைகளின் வாழ்க்கை அதுவும் கவுரவத்துக்ககவும் சொத்துக்காகவும் அச்சொந்தம் பிரிந்து போகும் பொழுது அந்த வலி அனுபவிக்க முடியாத ஒன்றாகிப் போகிறது!

தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்தாலும் தென்கிழக்குச் சீமையிலே வந்து காதுக்குள் புகுந்து கொள்கிறது! அண்ணன் தங்கை போராட்டம் என்று தெரியும்! குரல் மூலமாக ராதிகா விஜயகுமார் நடித்தது என்று தெரியும்! இப்பாடலை எழுதினது யார்? இசையமைத்தது யார்? படத்தின் போக்கில் கிராமத்து வாசனை இருந்ததால் டைரக்டர் பாரதிராஜா என்றும் புரிந்தது! மீதி எதையும் புரிந்து கொள்வதற்கு அன்று வயதுமில்லை! வசதியுமில்லை! அறிவுமில்லை!

வெறும் ஒலி மூலமாக ஒரு கற்பனைக் காட்சியில் இந்தப் படத்தை என் மனக் கண்களில் பார்த்தேன்! ஆனால் இப்பாடல் மட்டும் மனதை விட்டு அகலவில்லை! கண்டிப்பாக அதற்கு வைரமுத்துவின் வரிகள் தான் காரணம்! இப்படி ஒரு பாடலை வைரமுத்துவைத் தவிர வேறாரும் எழுதிவிட முடியாது! நான் அடிக்கடி பாடுவதும் நினைத்துப் பார்ப்பதும் இப்பாடலைத்தான்!
பொதுவாக தென்மேற்குத் திசையில் தான் மழை அதிகம் வரும் ஆனால் தென்கிழக்கு திசையில் மழை மிகவும் குறைவே! ஆனால் பாசம் என்ற மழையை மையப் படுத்தி எழுதிய வரிகள் நெஞ்சள்ளிப் போகின்றன!பொதுவாக கிராமத்தில் ஈசாந்தி மூலையில் தான் கிணறு வெட்டுவார்கள் அதை மையமாக வைத்து....இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு ....இவ்வரிகளை எழுதியிருப்பது பெருமைக்குரியது!
ஒரு அண்ணன் சொத்து சுகம் மானம் மரியாதை அத்தனையுமே ஒரு தங்கைக்காக இழந்தும் தங்கையை மட்டும் இழக்க முடியாத ஒரு அண்ணனின் தவிப்பு இப்பாடலில் பிரதிபலிக்கிறது !

ஒரு திரைப் படத்தைப் பார்க்காமல் வெறும் ஒலியால் மட்டுமே அதன் சாராம்சத்தை உணர்த்திய இப்பாடல் என் வாழ்வில் மறக்க முடியாதது! அதற்கு காரணம் இவ்வளவு கனமான வார்த்தைகளைக் பாடலாக கோர்த்த வைரமுத்து மட்டும் தான்! திரைப் படத்தைப் பார்த்தபின்பு தான் அதன் வலிமை முழுவதும் தெரிகிறது!இதோ அவ்வரிகள்.........

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம்போன வாழ்க்கையிலும் சாரல் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசான மூலையில மேகம் இருக்கு
(தென்கிழக்கு..)

தாய்வீட்டுப் பேரும் தாய்மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே
சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே
குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே
கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வரலையே
உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே
(தென்கிழக்கு..)

செங்காத்து மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கைவிட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன்மானம் கூட அண்ணன் விட்டுத்தருமே
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே
(தென்கிழக்கு..)

படம்: கிழக்கு சீமையிலே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா

எழுதியவர் : சஹானா தாஸ் (13-Jul-14, 7:13 pm)
பார்வை : 495

மேலே