உதவிக்கரம் - நாகூர் லெத்தீப்
வேதனைகள்
நிறைந்த நோய்களை
சுமக்கும்
மனிதன்
யார் இங்கே.........!
பரிதவிக்கும்
நோயாளிகள்
அறுவை
சிகிச்சை
பணமோ அதிகம்.......!
செய்வதறியாது
குழப்பத்தில்
குடும்பங்கள்
பணத்திற்கு
என்ன செய்வது.........!
உதவிடும்
அரசாங்கம்
வேடிக்கை பார்க்கிறது
உயிரின் மதிப்பை
விலைக்கு
விற்கிறது......!
உயிருக்கு
மதிப்பில்லாத
உலகம் இருந்து
என்ன
அழிந்தாலும்
என்ன............!
பணத்திற்கு
உடல் உறுப்புகள்
திருடப்படுகிறது
உயிரோடு மனிதன்
புதைக்கப்படுகிறது..........!
விபத்துகள்
ஏற்படுதல்
மனித வேட்டைகளின்
கூடாரமே..........!
மனிதாபிமானம்
எங்கே மனிதன்
எங்கே காலம்
சிரிக்கிறது உலகம்
இருளடைந்து
செல்கிறது..........!