மௌனத்தின் பிம்பங்கள்

அந்திப்பொழுதின் அழகினில்
ஆகாய்ச் சிவப்பின் மெளனம்

ஆழ்கடலின் நீலநித்திரையில்
உறங்கிக் கிடக்கும் மெளனம்

தென்றலின் மெல்லிய தழுவலில்
பொழிலில் நிறைந்து நிற்கும் மெளனம்

மூடியிருக்கும் மொட்டிலும் மெளனம்
மெல்ல இதழ் விரியும் பூவிலும் மெளனம்

மோனத் தவம் புரியும் ஞானியின்
ஆழ் மனதின் சலனமற்ற மெளனம்

வைகறைப் பொழுதின் தூய மெளனம்
பனித்துளிகள் மலரிதழில் துயிலும் மெளனம்

பாதி மூடியும் முழுதும் திறவாத அவள்
இதழ்களில் முத்துக்கள் கைகோர்த்து நிற்கும்
புன்னகையில் பொருள் பொதிந்த மெளனம்

இயற்கையின் எழில் காட்சிகளில்
தன்னை மறந்து நிற்கும் கவிஞனின் மெளனம்

ஆகாயம் முதல் ஆழ் மனது வரை மெளனமே
உன் அதிசய வடிவங்களும் அழகிய பிம்பங்களும்
ஆன்ந்தம் ஆனந்தம் என்றுமே !


~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Jul-14, 9:59 pm)
Tanglish : mounathin pimpangal
பார்வை : 520

மேலே