matching மங்களம்
ஒரு நாள் matching மங்களமும் கணவன் மௌனகுருவும் சினிமாவுக்குப் புறப்பட்டாங்க.
அந்த அம்மா அன்றைக்கென்று பச்சை சாத்துற படலத்திலே மூழ்கிட்டாங்க. புடவை பச்சை, ஜாக்கெட் பச்சை, வளையல் பச்சை, கம்மல் பச்சை, ரிப்பன் பச்சை, நெக்லஸ் பச்சை கைப் பை பச்சை.
திருப்தி ஏற்படலை செருப்பு பச்சையா அமையலை. நல்லவேளை கணவன் மௌனகுருவின் ஹவாய் செருப்பு வார் கொஞ்சம் பச்சை அதைக் கொடுத்து சமாளிச்சு நிம்மதியா பெருமூச்சு விட்டார் மௌனகுரு.
பஸ் ஸ்டாப்புக்கு வந்ததும் பிரச்சினை பெரிசாயிடுச்சி. சிவப்பு கலர்லே டவுன் பஸ் வந்திச்சி. ஏறுவோம்னார் அவர். வேணாம், பச்சை கலர் பஸ் வரட்டும்- என்றார் அந்தம்மா.
அந்த பஸ் நாம போற தியேட்டருக்குப் போகாதும்மா
அப்போ தியேட்டரை மாத்துங்க இங்கிலீஸ் படமுன்னாலும் பரவாயில்லை. அப்படின்னாங்களே பார்க்கலாம்