ஒருதலையாய் காதலித்துப்பார்

தினமும்பின் தொடர்கிறேன்
உன்னை...
கண்டுகொள்ளவில்லை
உன் நிழல்கூட
என்னை...

இருந்தும் தொடர்கிறேன்
இதயம் முழுவதும்
உன் நினைவுகளை சுமந்து....!

எனது
கடமைகள் மறந்து
உனக்காக
கடைத்தெருவில் காத்திருக்கிறேன்....
உன்
கடைக்கண் பார்வைக்காக.....!

உன்னைக்காணும் ஆவலில்
எனது விழிகள்
இரவை மறந்து
விழிக்கின்றன....
விடியலை எண்ணியே
இரவெல்லாம் தவிக்கின்றன....

என்னால் உன்னை
என்னாமல் இருக்கமுடியவில்லை...
நீ
என்னை வெறுத்தாலும்
உன்னை மறக்கமுடியவில்லை...

உனது விழிகளில்
எனது உலகம்.....
நீ விழிக்கும் வரை
எனக்கு இருள்தான்.....

இதுவரை
உன்னை சுற்றிவருகிறேன்...
இனியும் வருவேன்
பூமியை சுற்றும் நிலவாய்.....நான்

நீ
என்னை
திரும்பி பார்க்கும்வரை
என்கால்கள்
உன்னையே பின்தொடரும்....


நீ
என்னை வேகமாய்
கடந்து செல்லும் தருணங்களில்
எனது
நாள்காட்டியில் மட்டும் ஏனோ
முட்கள் மெதுவாகவே நகர்ந்து செல்கின்றன....!

ஒருதலை
காதலின் வலியும் சுகம்தான்...!
தினமும்
உன்னை காணும் பொழுதெல்லாம்
கலங்கும் விழிகளின்
காரணம் அறிவாயா...?
நீயும்
ஒருதலையாய் காதலித்துப்பார்....
அப்பொழுது புரியும்...!

எழுதியவர் : அருண்குமார்.அ (15-Jul-14, 3:59 pm)
பார்வை : 146

மேலே