காதல்
தவறு செய்தால்
மாறலாம் என உறுதி தருகிறான்
சிந்தனைகள் மோதும் போது
எனக்கு மதிப்பு தருகிறான்
எதிலும் நான் முக்கியம்
எனும் நினைப்பு தருகிறான்
என்னினும் அழகிகள் ஆயிரம் இருந்தும்
நானே அழகி என்ற பெருமிதம் தருகிறான்
எதையும் செய்யலாம்
என்ற நம்பிக்கை தருகிறான்
எந்த நிலையிலும் நான்
மதிப்புள்ள அழகிய படைப்பென்று
தினம் சொல்லும்
உண்மை காதலன்
என் கணவன்