வெளிநாடு

விழாக்களுக்கு சிங்காரம் செய்து போக ஆசை
ஆனால் அவசொல்லுக்கு ஆளாகிவிடுவோமோ
என்ற பயத்தினால் போகவும் இல்லை
நால்வரைபோல் சிரித்து பேசமுடியவில்லை
பூவே கண்டு நெகிழும் மனம்
பூவே தலையில் சூட இயலவில்லை
விதவிதமாக சமைக்க ஆசை
மற்றவர் நகைப்பர் என்ற காரணத்தில் சமைக்கவும் இல்லை
கோவில்லுக்கு மட்டுமே வர முடிகிறது
மனம் கோவிலே நாடுகிறது
கணவன் வெளிநாடு சென்றதால்