உண்மை
எனக்கு இறைவன் கொடுத்ததில்
இதோ பந்தி பரிமாறுகின்றேன்...
அனைவரும் வருக!..
எனக்கு துன்பம் என நினைத்து
இன்பம் தந்த எதிரிகளே...
அருகிலே இருந்தாலும்
அரைகுறையாய் நேசித்த
நண்பர்களே...
உறவுகள் எனும் பேரில்
ஒட்டி வாழ்ந்த உயிரினங்களே...
வெளியிலே சிரிப்பும்
உள்ளே வெறுப்பும்...
நடித்திருக்க வேண்டியதில்லை நீங்கள்....
நான் பாசாங்கு செய்யும் பத்தினியைவிட
விசுவாசமாய் நடக்கும்
விலைமகளை நேசிப்பவன்...
துரோகம் செய்யும் நண்பனிலும்
தூரத்து எதிரியை போற்றுபவன்..
உண்மையாய் இருப்பதை தவிர
அப்படி என்ன தவறிழைத்தேன்?
நான் நினைத்ததை எல்லாம்
சொன்னதுமில்லை...
சொன்னது எல்லாம் நான்
நினைத்ததுமில்லை...
உங்கள் தராசுகள் தவறானவை!
அதில் நடுமுள்ளே இல்லை..
நான் என்ன செய்ய?....