நான் நீ அவள்
ஒரே இரவில்
மூன்றாம் முறைக்குப் பின்னான
களைப்பில்
உன் மார்பிலேயே
தலை வைத்து உறங்கிவி்ட்டேன்
என் காலடியிலமர்ந்து
அவள் அழுது கொண்டிருந்தாள்.
என் கையைப் பிடித்து
அழைத்துச் செல்கிறாள்
அழகானதொரு வனத்தில்
நடந்து கொண்டிருந்தோம்
தூரத்திலிருக்கும்
அருவியொன்றைக் காட்டினாள்
நாங்களிருவரும் குளித்துக் கொண்டிருந்தோம்
கட்டியணைத்தாள்
முத்தமிட்டாள்
நான்
அருவி்யியையும்
எங்களையுமே
பார்த்துக் கொண்டிருந்தேன்
பேருந்தொன்று எங்களருகில் வந்து நின்றது
இருவரும் ஏறிக் கொண்டோம்
எல்லா இருக்கைகளிலும்
நாங்களே அமர்ந்திருந்தோம்
கடைசி இருக்கையைத் தவிர
அதில் அமர்ந்தோம்
என் இடது தோளில்
சாய்ந்தவாறே
கதைத்துக் கொண்டு
பின் தூங்கிப் போனாள்
பேருந்து நின்றதும்
சட்டென நினைவு வந்தவளாய்
விழித்துக் கொண்டாள்
தூரத்தில் இருக்குமொரு
வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்
அறைக் கதவைத் திறந்தாள்
உன் மார்பில்
தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தேன்
என் காலடியிலமர்ந்து
அவள் அழுது கொண்டிருந்தாள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
