செல்பேசி பேசுகிறது

என் மேனியில்
உன் விரல் தீண்டும்
இன்பத்தில் திளைத்து
நான் அடிக்கடி
செல்லமாய் சிணுங்குகிறேன் !!

என் மூலம்
யாருக்குக் கொடுத்தால் என்ன ?
உன் முத்தம்
முதலில் கிடைப்பது
எனக்குத்தானே ??

எழுதியவர் : ராஜ லட்சுமி (18-Jul-14, 11:18 pm)
Tanglish : kaipesi pesukirathu
பார்வை : 109

மேலே