கனவுகளும் காகிதப் பூக்களும்
வெட்டிய மரங்களை நட்டு வைப்போம்
கட்டிய கோவில்களில் கல்வியை போதிப்போம்
காசுக்காய் சுரண்டும் நாசக் காரர்களை
நடு ரோட்டிலே கட்டிவைத்து அடிப்போம்
நாடெங்கும் ஓர் கல்வியை நடத்த வைப்போம்
ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை
ஓட...ஓட ... விரட்டி அடிப்போம் ...!
போடும் திட்டங்களால் ஏழ்மையை விரட்டிடுவோம்
காதலுக்கு மரியாதையை செலுத்தி
ஜாதிகளை கலைத்திடுவோம் - அந்நிய
முதலீட்டை அப்புறப் படுத்தி -புதிய
பொருளாதாரக் கொள்கைக்கு வித்திடுவோம்
நதிகளை ஒன்றாக்கி மனிதரில்
ஒற்றுமையை வளர்த்திடுவோம்
திறமைக்கு தலை தாழ்த்தி வரவேற்று
உரிமையை ஒதுக்கி தருவோம் ...!
சமுதாய எச்சங்களை சமாதியாக்கி
அச்சம் இல்லை என அரை கூவல் இடுவோம்
தாய் மொழியையும் பண்பாட்டையும் இரு
கண்ணாகக் கொண்டு புதிய பாதை சமைத்திடுவோம் !
இவை எல்லாம் இந்தியக் குடிமகனின்
கனவான காகிதப் பூக்கள் .......................!