மலரின் கவிதை
ஒரு மலரின் கவிதை
அது இதழ் விரியும்போது
துவங்கும்
மௌனத்தில் சிரிக்கும்போது
அழகு பெறும்
வாசத்தால் வரவேற்கும் போது
மணம் தரும்
வண்டுகள் வாசித்து புகழும் போது
நன்றி சொல்லும்
ஒரு பெண் பறித்து சூடும் போது
மகிழ்ந்து நிற்கும்
ஒரு கவிஞன் எழுத்தில் வைக்கும் போது
காலத்தினால் அழியோம் என்று
நிறைவு பெறும் !
~~~~கல்பனா பாரதி~~~
படத்தில் முல்லை மலர்