நம்பிக்கையின் கரம்
சுயம் கரைந்து கல்லாய்
நான் இருக்கப் போவதில்லை
காதல் மிகுந்த வரிகளுக்கு
சமூகம் கத்தரி போடலாம்
உணர்வுகளை ,மேயும் வேலியாய்
சுற்றி இருப்பவர் நகைக்கலாம் .....
ஆயினும் பயணிப்பேன்
என் பாதையில்
நம்பிக்கையின் கரம் கொண்டு.......