பூக்களோடு ஒரு கைக்குலுக்கள்

பூக்களோடு ஒரு கைக்குலுக்கள். ...

சின்ன சின்ன இதழ்களால்
சிரிக்கும் வண்ண சித்திரமே!
மகரந்தம் மணந்திடும்
அழகு தேவதையே!

மழைத்தூறல்கள் சுமந்திடும் உன்
மடியினிலே
மெல்லத் தலைசாய்த்திடும்
செல்லக் குழந்தையானேன் நான்! (19)

தண்ணீரில் தாளமிடும்
தாமரையோ!
தங்கநிற சுடர் கொண்ட
செவ்வந்தியோ!
பெண்கள் கூந்தலிலே சிரித்திடும்
மல்லிகையோ!
காதலுக்கு தூதாகும்
ரோஜாவோ!
ஆதவனை கண்டதுமே மலர்கின்ற
சூர்யகாந்தியோ! (37)


எத்தனை விதவிதமாய்
என் கண்களுக்கு விருந்தாகிறாய்!

பணித்துளியில் குளிக்கின்றாய்-உன்
பன்னீர்முகம் மலர்கின்றாய்....
இதழ்விரியும் அழகினிலே-என்
இதயத்தை ஆட்கொண்டாய்..

உன் முகம் பார்க்கும் போதெல்லாம்
என் முகவரி மறந்து போகிறேன்..
உன் அழகு புன்னகையால்
என் உலகம் மறந்து போகிறேன்..(67)

வாழ்நாள் குறைவென்றாலும்
வசீகரமாய் வாழ்கிறாய்...
புன்னகையை பரிசாய் தருகிறாய்
புலம்பிடும் மனதிற்கு
ஆறுதலாகிறாய்....

கண்ணிரை கூட காதலிக்க
கற்றுக் கொடுக்கிறாய்...
நன்னிலம் போற்றும் நறுமணம்
கொண்டு
நாளைய விடியலுக்கு கவலையின்றி
காத்திருக்கிறாய்.....(90)

உன்னோடு கைக்குலுக்க இங்கு நான்
வெகு நேரமாய் காத்திருக்கிறேன்
நீ வருவாய் என..... (100)

அன்புடன் நிஷா

எழுதியவர் : நிஷா (19-Jul-14, 7:59 pm)
பார்வை : 143

மேலே