ஓடி கொண்டே இருக்கிறேன் இவ்வுலகில்
ஓடி கொண்டு இருக்கிறேன் உலகத்தை சுற்றி
தடுமாறி கொண்டு இருக்கிறேன் உலகம் என்னை சுத்தும் வேகத்தில்...
எழுத்தால் ஏட்டில் எட்ட முடியவில்லை என் எண்ணத்தை
என் எழுத்தும் எண்ணமும்
சிக்கி கொண்டது சிக்கலாய்....
பாசம் வேசம் கலந்த
பரந்த உலகில்
தோசமாய் என் கண்ணீர்...
படித்தேன் பட்டம் பெற்றேன்
தமிழையும் தன்மானத்தையும்
விட மறுத்தேன்
ஆங்கிலம் இல்லை துரத்த பட்டேன்
இன்று
வெற்றியை அடைய முடியவில்லை
தோல்வியால் மடியவில்லை
ஓடி கொண்டே இருக்கிறது இவ்வுலகில்
என் மனம்
வெற்றி கிடைக்க மறுக்கிறது
அதை அடைய துரத்துகிறது..