+++ நாங்கள் இப்படித்தான் +++

நீ தமிழ் பேசவில்லை என்பது
உனக்குதான் இழப்பு!
நான் தமிழ் பேசுவேன்
என் மகனும் என் பேரனும்
இனிய தமிழ் பேசுவர்!
எங்கள் திருக்குறளும் சிலம்பும்
எங்களோடு என்றும் சேர்ந்திருக்கும்!
நான் தமிழன்! என்குடி உயர் தமிழ்க்குடி!

நுனிநாக்கு ஆங்கிலமும்
நலின உடை நாகரிகமும்
நலிந்துகிடக்கிறது உன்னால்!
நாகரிம் நரகரிகமாகித்தவிக்குது உன்னில்!
குலப்பெருமையும் குடும்ப அருமையும்
கொஞ்சமும் தெரியாது வாழுதுந்தன் தலைமுறை!
நான் யாரென்றே அறியாது வளருமுந்தன் பரம்பரை!
ஏனடா! ஏனிந்த நிலையடா?..

எப்படியோ இருந்துவிட்டுப்போ!
எப்படியோ கிடந்துவிட்டுப்போ!
என சொல்ல மனம் கேட்கலையே..
தடுக்க நினைக்கும் என்னை
மாற்ற நினைக்கும் உன்னை
என்னவென்று சொல்ல ???
நான் இப்படித்தான்! இப்படித்தாண்டா!
எந்தமிழ் எம்மொழியென்றிருப்பேன்!

எம்மொழி செம்மொழியென்று
யாரும் கூறிடத் தேவையில்லை
எம்மொழி சிறப்பென்று
யாரும் பேசிடத் தேவையில்லை
என்மொழி ஆதிமொழியென்று
யாரும் ஆராய்ந்திடத் தேவையில்லை
என் மொழியும் என் வழியும் எனக்குத் தெரியும்!
என் தமிழும் என் வாழ்வும் எதையும் வெல்லும்!

எங்களோடு உயர் தமிழறிவு இருக்கும்
எங்களோடு அற்புதத் தமிழ்பண்பாடு இருக்கும்
எங்கள் வாழ்க்கையில் உயர்தனி சிறப்பிருக்கும்
எங்கள் வாழ்வில் உலகிற்கு வழிகாட்டலிருக்கும்
நாங்கள் வாழ்தோம் தமிழராக!
நாங்கள் வாழ்கின்றோம் தமிழராக!
நாங்கள் வாழ்வோம் தமிழராக!
நாங்கள் சரித்திரம் சேர்வோம் தமிழராக!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (20-Jul-14, 12:01 pm)
பார்வை : 246

மேலே