ஏங்க வைத்து விட்டதடி

ஏங்க வைத்து விட்டதடி ....!!!
----------------------------------

என்னை கண்டு அஞ்சாத
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத
மங்கையும் இல்லை .....!!!

அத்தனையும் ஒரு நொடியில்
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய்
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம்
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம்
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

குறள் - 1088

தகையணங்குறுத்தல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

எழுதியவர் : கே இனியவன் (21-Jul-14, 12:00 pm)
பார்வை : 66

மேலே