உன் அழகை கெடுக்கிறாய்
உன் அழகை கெடுக்கிறாய் ................!!!
-------------------------------------
என்னவளே
ஏனடி என்னை கண்டவுடன்
புலியை பார்த்த பெண் மானை
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை
பேரழகா ....?
அகத்தே நாணம் என்ற
பொன் அழகையும்
கொண்டவளே .எதுக்கடி
பொன் நகை அணிகலன்
அணிந்து உன் அழகை
கெடுக்கிறாய் ................!!!
குறள் - 1089
தகையணங்குறுத்தல்
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 09