எப்படி புரிய வைப்பேன்
போதையை உண்டவனுக்கும்
பேதையிடன் மாண்டவனுக்கும்
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!
பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு
காதல் உணர்வு இல்லாதவனுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும்
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!
குறள் - 1090
தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 10