உறக்கமில்லாத இரவு

நிலவின் குளிர்மையை உணர
நட்சத்திரங்கள் அருகில் இருக்க
உன் யாபகங்கள் என்னுள் எழ
ஒரு இரவு கண் விழித்திருந்தேன் ....
நட்சத்திரம் ஒன்று நிலவுக்கு
அருகில் சென்று ஏதோ
இரகசியம் கதைக்கிறது .....
நீ என்னருகில் இருந்து இரகசியம்
சொன்னது போல் .....
மேகத்தால் நிலவும் நட்சத்திரமும்
மறைந்து தனிமையான சோகத்தை
பறைசாற்றியது ......
நீ என்னை பிரிந்ததை
இரவு வானம் சொல்வது போல் ......

எழுதியவர் : fasrina (21-Jul-14, 3:51 pm)
சேர்த்தது : fasrina
பார்வை : 269

மேலே