நான்்ரசித்தெதன்றல்
ரேகை இல்லா வானம்.....
ரோந்து போகும் மேகம்....
காலை என்ன.....?
மாலை என்ன.....?
உன்னை பார்த்து வர
தூரம் என்ன....?
சாலை இல்லை.....
பாலம் இல்லை.....
உன்னை சந்தித்திட,
எதுவோ எல்லை...?
நேரம் சொல்ல
நீயுமில்லை...
நேரில் நீ வந்து செல்ல,
காலம் இல்லை....
கண்களிலே கெஞ்சல்
கொண்டேன்....
கார் குழலினிடையே,
கொஞ்சல் தந்தாய்...
முற்றத்திலே தினம்
தரிசனமாய் ,
திண்ணையில் கொஞ்சம்
கரிசனம் கொண்டாய்...
விழி தேடும் ஸ்பரிசமே.....ஜன்னலோர மின்னலே....
நான் இரசித்திடும்,
அவள் தென்றலே....!!!