மீண்டும் உங்களுடன்

இடைவெளி தான்
இடை வேலி அல்ல

உடுக்கை இடையில்
உள்நுழைய துடிக்கும்
காற்றும் அவ்வப்போது
இடைவெளி தான்

தொடர்ந்து செயல்புரியும்
சுவாசம் கூட சற்று
இடைவெளி எடுக்கும்
அதுபோலவே யாவும்

இதயம் துடிக்கும்
துடிப்பும் இடைவெளியில்
இயங்கும் உலகம்
சுழற்சி இடைவெளியில்

எடுக்கும் பல முடிவும்
இடைவெளியில்
இயக்கம் யாவிற்கும்
அவசியமாகும் இடைவெளி

நானும் அதுபோலே
இடைவெளியில்
இடை வேலியில் அல்ல ...!

எழுதியவர் : கனகரத்தினம் (22-Jul-14, 10:32 am)
பார்வை : 194

மேலே